Posts

Showing posts from December, 2022

இரண்டு முதல் ஐந்து வரையிலான நான்கு எனப்படும் ஐந்து திங்கள்கள்

Image
  வினை: பயிற்சி பெறுதல் (பள்ளியில் பயிற்சி ஆசிரியர்களாக) களம்: பயிற்சிக்கு சென்ற பள்ளி, செய்வினையாளர்கள்: அருள் ரூபன் (தமிழ்), அழகுராஜ் (தமிழ்), கார்த்திக் ராஜா (கணிதம்), சந்துரு (அறிவியல்), தர்மசீலன் (அறிவியல்), சங்கர் (கணினி அறிவியல்).      ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்திற்காக விடுமுறை விட்டதற்கான மறுநாள் மதியம் சுமார் ஒரு மணியளவில் மேலே கூறப்பட்ட மாந்தர்கள் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்ட பள்ளிக்கு கையில் ஒரு மொட்டை கடிதத்துடன் செல்கின்றனர். மொட்டை கடிதம் எனச் சொல்வதால் இதை வாசிக்கும் சிலர் கோபப்படலாம். அந்த கோபத்திற்கு எழுதக்கூடியவர் காரணமில்லை அந்த கடிதம் மட்டுமே காரணம். காரணமில்லை காரணம் என கதை விடாமல் காரணத்தை சொல்லி விடுகிறேன் இல்லையென்றால் இது பிராது ஆகிவிடும் என்பதை நான் அறிவேன். அந்த கடிதத்தில், மேலேயுள்ள மாந்தர்களின் பெயர்கள் தவறேதும் இல்லாமல் முகப்பெழுத்துடன் முழுமையாக இடம் பெற்றிருந்தது என்பது உண்மை. ஆனால், பயிற்சிக்கு செல்லும் மாந்தர்களுக்கு எந்தெந்த வகுப்பு என்னென்ன பாடங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்கிற விவரம் இல்லை. இந்த கடிதத்