Posts

Showing posts from April, 2025

மெய்ப்பொருள் வண்ணம்

Image
       ப. வ. இராமசாமி ராஜூவின் பிரதாபசந்திர விலாசம் நாடக நூல் குறித்து உரை நிகழ்த்தும் வாய்ப்பை மெய்ப்பொருள் வண்ணம் கலை இலக்கியப் பள்ளியினர் வழங்கினர். உடன் உரையாளராக தம்பி கிரண்குமார் சீ. அருணிண் சயாம் பர்மா மரண ரயில் பாதை நூல் குறித்து உரை வழங்கினார்.      மெய்ப்பொருள் வண்ணம் கலை இலக்கியப் பள்ளியினராக தோழர் இராகுலன், சகோதரர்கள் பிரபாகரன், வீரமணி முதலானோர் செயல்படுகின்றனர். கடுமையான பணிச்சூழல் மத்தியிலும் பின்புல உழைப்பைச் செலுத்தி வருபவர் சகோதரர் உமாசங்கர். தொடர்ச்சியாக எல்லா நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு உரையாடலை பகடி தொனிக்கும் கருத்துகளுடன் அறிவார்த்தமாக நகர்த்துபவர் மிசே கண்ணதாசன். தலித் நோக்குடன் தனது கூர்மையான கருத்துகளை எப்போதும் வெளிப்படுத்துபவர் வசந்த்குமார். இப்படியாக இவர்களுடன் பரசுராமன் உள்ளிட்டோர் தொடர் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர். தமிழியற் கல்விப்புலத்தில் இருந்து கல்விப்புலச் செயல்பாடுகளைத் தாண்டி பொதுநிலை வாசிப்பை ஊக்குவிக்கும் இவர்கள் முனைப்பிற்கு ஊக்கம் அளிக்கும் விதமாக தமிழியலைத் தன் துறையாகத் தேர்வு செய்யாத பல்துறை ஆர்வலர்களும...