Posts

வராகா நதிக்கரையோரம் - அழகுராஜ்

Image
          கடும் நிசியைப் போல தான் அந்தப் பொழுது இருந்தது. ஆனால் மணி என்னவோ 8:15 தான். அந்த நேரத்தில் ஏற்கனவே, வந்து போன பழக்கம் இருந்தும் அன்று ஏதோ ஒன்று புதிதாக இருந்தது. திருவிழா கோலத்தின் ஒளியின் அம்சம் அன்றைய இரவில் கைகூடி இருந்திருப்பதை உணர்ந்ததும் கூடுதல் காரணமாக இருக்கலாம். இவை எல்லாம் இப்படி இருக்க எண்ணத்திற்கு வலு சேர்க்கும் பெரும் அம்சமாக கல்லூரி பெண்களின் ஒப்பனையான முகமும் வாலிப்புடைய நடையும் வந்து சேர்ந்ததை எப்படிச் சொல்வது. கூட்டம் கூட்டமாக பெண்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் அந்த நேரத்தில் எத்தனையோ பையன்கள் ஜியோ சினிமாவில் ஐ.பி.எல். பார்த்துக் கொண்டிருப்பார்கள். அது எதையும் அறியாமல் அவர்கள் அங்கே நின்று சிரிக்கவே செய்தனர். அந்த நேரத்தில் அவனது வருகையும் குறிப்பிடப்பட்ட இடம் நோக்கிச் சென்றது‌. ஐ.பி.எல் ரசிகர்களில் அவனும் ஒருவன் தானே. அவன் மட்டும் ஸ்கோர் என்ன என்று தெரியாமல் இருந்து விடுவானா? இவன் கூகுளில் ஸ்கோர் பார்த்துவிட்டு பயங்கரமான கம்பாக் என போட்டியில் முடிவு எப்படியாகும் என்று எந்த வியூகமும் இன்றி பூவரசனுக்கு போன் போட்டு பேசிக் கொண்டிருந்தான். போன் போட்டு

இரண்டு முதல் ஐந்து வரையிலான நான்கு எனப்படும் ஐந்து திங்கள்கள்

Image
  வினை: பயிற்சி பெறுதல் (பள்ளியில் பயிற்சி ஆசிரியர்களாக) களம்: பயிற்சிக்கு சென்ற பள்ளி, செய்வினையாளர்கள்: அருள் ரூபன் (தமிழ்), அழகுராஜ் (தமிழ்), கார்த்திக் ராஜா (கணிதம்), சந்துரு (அறிவியல்), தர்மசீலன் (அறிவியல்), சங்கர் (கணினி அறிவியல்).      ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டத்திற்காக விடுமுறை விட்டதற்கான மறுநாள் மதியம் சுமார் ஒரு மணியளவில் மேலே கூறப்பட்ட மாந்தர்கள் பயிற்சி பெற தேர்வு செய்யப்பட்ட பள்ளிக்கு கையில் ஒரு மொட்டை கடிதத்துடன் செல்கின்றனர். மொட்டை கடிதம் எனச் சொல்வதால் இதை வாசிக்கும் சிலர் கோபப்படலாம். அந்த கோபத்திற்கு எழுதக்கூடியவர் காரணமில்லை அந்த கடிதம் மட்டுமே காரணம். காரணமில்லை காரணம் என கதை விடாமல் காரணத்தை சொல்லி விடுகிறேன் இல்லையென்றால் இது பிராது ஆகிவிடும் என்பதை நான் அறிவேன். அந்த கடிதத்தில், மேலேயுள்ள மாந்தர்களின் பெயர்கள் தவறேதும் இல்லாமல் முகப்பெழுத்துடன் முழுமையாக இடம் பெற்றிருந்தது என்பது உண்மை. ஆனால், பயிற்சிக்கு செல்லும் மாந்தர்களுக்கு எந்தெந்த வகுப்பு என்னென்ன பாடங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்கிற விவரம் இல்லை. இந்த கடிதத்